தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க அதிகபட்சமாக 3 மணி நேரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என இந்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
இந்த நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மாலை காண உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என தினமும் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
விடுமுறை நாட்களில் இதன் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும். கூட்ட நெரிசல் நாளுக்குநாள் அதிகமாவதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. எனவே கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க நேரக்கட்டுபாடு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்படி, சுற்றுலா பயணிகள் அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே தாஜ்மகால் வளாகத்துக்குள் இருக்க முடியும். அதற்குமேல் இருப்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதன்மூலம் வளாகத்துக்குள் அதிகநேரம் சுற்றுலா பயணிகள் இருப்பது குறையும்.
தாஜ்மகாலை சுற்றுலா பயணிகள் எவ்வித சிரமும் இன்றி பார்த்து ரசிக்கும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நேரக்கட்டுபாடு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
தாஜ்மகாலை விட மிக பழமையான சீனா சுவர், அதிக மக்கள் காணும் சீனா சுவர் என்று இருக்கும் போது சுற்றுச்சூழல் என்ற பெயரில் இது பாஜக அரசின் காழ்புண்ர்ச்சியை காட்டுகிறது என்கிறார்கள் இயற்கை ஆர்வாளர்கள்